எக்ஸ்ட்ரா 20 நாளுக்கு கமல் போட்ட பில்!.. ஆத்தாடி இத்தனை கோடியா?!.. ஜவ்வா இழுக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!...
ஷங்கர் நடிப்பில் கமல்ஹான் இரட்டை வேடத்தில் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 24 வருடங்கள் கழித்து 2020ம் வருடம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர்.
லைக்கா நிறுவனம் இப்படதை தயாரிக்க முன்வந்தது. கமலுக்கு ரூ.30 கோடி சம்பளம் பேசப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், கடந்த 3 வருடங்களாக பல காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தை ஷங்கர் முடித்தார்.
இதையும் படிங்க: திரிஷாவால் லியோவுக்கு வந்த ஏழரை!.. இன்னும் எத்தனதான் வச்சிருக்கீங்க சொல்லுங்கடா!…
ஆனால், காட்சிகளை ஒருங்கிணைத்து பார்த்ததில் இந்தியன் 3 உருவாகிவிட்டது. இந்தியன் 3 தயராக இருக்கிறது. எனவே, இந்தியன் 2வில் சில காட்சிகளை சேர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என ஷங்கர் சொல்லிவிட்டாராம். இதில், கமலிடம் மட்டும் 20 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர்.
மீண்டும் கால்ஷீட் கொடுக்கவேண்டுமெனில் ரூ.120 கோடியை சம்பளமாக கொடுங்கள் என கமல்ஹாசன் சொல்லிவிட்டாராம். லைக்கா நிறுவனமும் இதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாம். ஏனெனில், ஒரு படத்தில் நடிக்க கமல் ரூ.150 கோடி சம்பளம் கேட்கிறார். இந்திய 2, இந்தியன் 3 என இரண்டு படங்களுக்கும் சேர்த்து கமலுக்கு ரூ.300 கோடி கொடுக்கவேண்டும்.
இதையும் படிங்க: செய்யக் கூடாததை எல்லாம் செய்ய வைத்த மிஷ்கின்! யாருக்கு நடக்கும் இந்த அவலம்? – பாண்டியராஜன் பட்ட வேதனை
ஆனால், இந்தியன் 2 மூன்று வருடத்திற்கு முன்பே துவங்கியதல் அப்போது ரூ.30 கோடி மட்டுமே பேசப்பட்டுவிட்டது. இப்போது மேலும் 120 கோடி என்றாலும் மொத்தமே ரூ.150 கோடிதான் வருகிறது. எப்படி பார்த்தாலும் லைக்காவுக்கு கமல் ஒருபடம் இலவசமாக நடித்து கொடுத்த கணக்குதான்
எனவே, இந்த படத்திற்கு விரைவில் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்கவுள்ளார். இந்த 60 நாட்களில் ஷங்கர் படத்தை முடித்துவிட்டால் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் துவங்கிவிடும். எனவே, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அடுத்தடுத்து வெளியாகும்.
இதையும் படிங்க: இன்னா ஸ்பீடு!.. இந்தியன் 2 டப்பிங்கை ஆரம்பித்த கமல்ஹாசன்!.. ரஜினியோட மோத போறாரா?.. வீடியோவை பாருங்க!..