இந்த காட்சி மட்டும் கூடவே கூடாது… கண்டிஷன் போட்டு கமல் படத்தில் நடித்த முன்னணி நடிகை..!

by Akhilan |
இந்த காட்சி மட்டும் கூடவே கூடாது… கண்டிஷன் போட்டு கமல் படத்தில்  நடித்த முன்னணி நடிகை..!
X

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கெட்டி என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்த சேதி தான். முக்கியமாக அவர் படங்களில் நாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரோல் அதிகம் இருக்கும். அதனால் அவர் படத்தில் நடித்தால் வரவேற்பு நடிகைகளுக்கு அதிகமாகவே இருக்கும்.

ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருக்கும். பெரும்பாலான அவர் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு லிப்லாக் கொடுத்து விடுவார். புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவின் அனுமதி இல்லாமல் லிப்லாக் கொடுத்து இருந்தார். இதை ரேகாவே சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசி இருந்தார்.

இதையும் படிங்க: சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..

எல்லா நடிகைகளிடமும் கமல் லிப்லாக் கொடுக்கும் காட்சிகளை வைத்து இருந்தார். சில நடிகைகளிடம் அதற்கு அதிகமாக காட்சிகளும் படத்தில் இருக்கும். இதையெல்லாம் பார்த்த நடிகை சினேகா முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்க பயந்தாராம். ஹோம்லி வேடத்தில் நடிக்கும் சினேகா அந்த காட்சிகளில் நடிப்பதை விரும்பாதவர்.

இதனால் கமல் மாதிரி பெரிய ஸ்டாருடன் நடித்தால் கூட தன்னுடைய கொள்கையை மாற்றி கொள்ள விரும்பாமல் லிப் லாக் கொடுக்க கூடாது. கொடுக்கவும் வற்புறுத்தக் கூடாது என கண்டிஷன் போட்டாராம். அதற்கு படக்குழு ஓகே சொன்ன பிறகே அந்த படத்தில் பாப்பு கேரக்டரில் நடித்தாராம்.

இதையும் படிங்க: அந்த நடிகையை மன்சூர் பேசியபோது சிரிச்சீங்க!. இப்ப மட்டும் கோபம் ஏன்?.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்.

Next Story