கேப்டன் போல மாறிய கமல்!.. ரஜினிக்கு வந்த நெருக்கடி!.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!…

Published on: March 9, 2024
kamalhaasan
---Advertisement---

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என பல வருடங்களாக பேசி வருகிறார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் துவங்கி பலரும் நடிகர் சங்க தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நடிகர் சங்கம் மீதிருந்த கடனையும் அடைக்கவில்லை. கட்டிடமும் கட்டப்படவில்லை.

நடிகர் சங்க தலைவர் பதவியில் விஜயகாந்த் அமர்ந்தபோது ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களையும் ஒன்று திரட்டி மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்ததோடு 2 கோடி ரூபாய் இருப்பிலும் வைத்து விட்டு போனார். அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை சரியாக பராமரிக்கவில்லை.

இதையும் படிங்க: எல்லா கோட்டையும் அழிங்க!.. விஜய் 69 பட இயக்குனர் இவர்தானாம்!. அட போங்கப்பா!..

இதில், கோபப்பட்ட நடிகர் விஷால் – கார்த்தி அண்ட் கோ தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. நடிகர் சங்க தலைவராக நாசர் வெற்றி பெற்றார். கார்த்திக் பொருளாளராகவும், விஷால் செயலாளராகவும் அமர்ந்தார்கள். ஆனால், விஷாலை பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி அவரை இயங்கவிடாமல் செய்தனர்.

மேலும், புதிய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியும் முடங்கிப்போனது. அதன்பின் விஷாலை எதிர்த்து பாக்கியராஜ் தலமையில் ஒரு அணி தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அந்த தீர்ப்பு இப்போதுவரை வெளிவரவில்லை. எனவே, எப்படியாவது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என கணக்குபோட்ட கார்த்தி – விஷால் குழு ஒரு திட்டத்தை போட்டனர்.

இதையும் படிங்க: குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்! கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!..

வங்கியில் லோன் வாங்கி கட்டிடத்தை கட்டுவது. ஒருபக்கம், நடிகர்கள் எல்லோரிடமும் அவர்களின் சம்பளத்துக்கு ஏற்ற மாதிரி பணம் வாங்கி மொத்தமாக வங்கியில் இருப்பு வைத்துவிட்டு அதில் வரும் வட்டி பணத்தில் வங்கிக்கான மாத தவணையை கட்டிவிடுவது. மொத்த மாத தவணையும் கட்டி முடிக்கப்பட்டவுடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவது என முடிவெடுத்தனர்.

kamal

இந்நிலையில், தனது பங்காக ரூ.1 கோடிக்கான காசோலையை கார்த்தியிடம் இன்று நடிகர் கமல்ஹாசன் கொடுத்துவிட்டார். எனவே, ரஜினி என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நடிகர்கள் அனைவரும் உதவி செய்தால் மட்டுமே நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இவ்வளவு நாளா மறைஞ்சிருந்த கருப்பு ஆடு.. ‘விடாமுயற்சி’ டிலே ஆனதுக்கு காரணமே அவர்தானாம்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.