Connect with us
vijay

Cinema News

எல்லா கோட்டையும் அழிங்க!.. விஜய் 69 பட இயக்குனர் இவர்தானாம்!. அட போங்கப்பா!..

பொதுவாக விஜய் அவர் நடித்து வரும் படம் முடியும் நிலையில்தான் அடுத்த படம் பற்றி யோசிப்பார். ‘கோட்’ படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. மார்ச் மாதத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவே சொல்லிவிட்டார்.

கோட் படம் விஜயின் 68வது திரைப்படமாகும். எனவே, அவரின் அடுத்த அதாவது 69வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. பல இயக்குனர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது. முதலில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவிருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் சொன்னார்கள்.

இதையும் படிங்க: குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்!… கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!…

அதன்பின் வெற்றிமாறன் பெயர் அடிபட்டது. அதன்பின் குண்டூர் காரம் பட இயக்குனர் திரி விக்ரம் இயக்கப்போவதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கிடையில் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்து ஆச்சர்யம் கொடுத்தார்.

எனவே, தொடர்ந்து அவர் சினிமாவில் நடிப்பாரா என்கிற சந்தேகமும் இருக்கிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன் என விஜயும் சொல்லி இருந்தார். அப்படியானால் அவரின் 69வது கடைசி படமாக இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க: இவ்வளவு நாளா மறைஞ்சிருந்த கருப்பு ஆடு.. ‘விடாமுயற்சி’ டிலே ஆனதுக்கு காரணமே அவர்தானாம்!..

இந்நிலையில், விஜயின் 69வது படத்தை இயக்கும் லிஸ்ட்டில் ஹெச்.வினோத்தும் இணைந்திருக்கிறார். அவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருக்கிறது. ஆனால், அந்த தெலுங்கு நிறுவனமோ திரி விக்ரம் இயக்கட்டும் என சொல்கிறதாம். எனவே, திரி விக்ரமா இல்லை ஹெச்.வினோத்தா என்பதை விஜய் இன்னு 10 நாட்களில் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

H Vinoth

H Vinoth

கமலை நம்பி ஒரு வருடம் காத்திருந்த ஹெச். வினோத் தனுஷை வைத்து ஒரு படம் இருக்கவிருக்கிறார். ஆனால், அது துவங்க இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. எனவேதான், விஜய் பக்கம் போயிருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: டிஷ்கஷனுக்கே இவ்வளவு செலவா?!.. அட்லி செஞ்ச வேலையில் அதிர்ச்சியான பிரபல தயாரிப்பாளர்…

google news
Continue Reading

More in Cinema News

To Top