Cinema News
Kanguva: அடிமேல் அடி!… தியேட்டரில் காத்து வாங்குதா கங்குவா?!… 2-ம் நாள் வசூல் விவரம் இதோ!…
கங்குவா திரைப்படத்தின் 2-வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக உருவான இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்திருந்தார். சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியல… கங்குவா 2க்குத் தயாரான இயக்குனர்
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 14ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் 11, 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதிலும் படத்தின் ப்ரோமோசனின் போது படக்குழுவினர் படம் குறித்து பேசிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதிலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு மேடைகளிலும் படம் குறித்து பில்டப் மேல் பில்டப் கொடுத்து வைத்திருந்தார்கள். சூர்யா தொடங்கி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வரை அனைவருமே இந்த திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடும் என்கின்ற அளவுக்கு ஓவர் ஹைப் கொடுத்திருந்தார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியாகி அந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.
தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் படத்தின் இசை, படம் முழுக்கவும் முக்கியமான காட்சிகளில் வெறும் இரைச்சலாகவே இருப்பதாகவும் இது ரசிகர்களை எரிச்சலடைய செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இன்று படத்தின் இசை அளவை இரண்டு பாயிண்டுகள் குறைத்து வைக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரிக்கை வைத்திருக்கின்றார் இந்நிலையில் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 58.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டாவது நாளில் படம் மிக குறைந்த வசூலையே பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!
அந்த வகையில் இரண்டாவது நாள் இந்தியா முழுவதும் ரூபாய் 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் உலகம் முழுவதும் இந்தியாவின் வசூலை சேர்த்து கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் சேர்த்து 80 கோடி தான் படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.