Connect with us
Kannadasan

Cinema History

ஒரே வார்த்தை ஓஹோன்னு பாட்டு… அந்த ஒரு சொல்லால் கண்ணதாசனின் தலையில் உதித்த கிளாசிக் பாடல்… என்னவா இருக்கும்??

கவியரசர் என்று போற்றப்படும் கண்ணதாசன் தமிழுக்கு மிகப் பெரிய பெருமைகளைச் சேர்த்தவர் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவரது சிந்தனையில் உதிக்கும் பாடல் வரிகள் அனைத்துமே ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பொக்கிஷமாக சேர்த்து வைக்கூடிய அளவுக்கு மதிப்பு மிக்கவை. அந்த அளவுக்கு தமிழிலே சிறந்த புலமையும், கவிதையில் சிறந்த நடையும் கொண்டவர் கண்ணதாசன்.

Kannadasan

Kannadasan

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் பாடல் பதிவின்போது கண்ணதாசனுக்கு பாடல் வரியே உதிக்கவில்லையாம். அப்போது அவர் காதில் விழுந்த ஒரே ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு ஒரு கிளாசிக் பாடலை எழுதியிருக்கிறார். அது என்ன பாடல்? அவர் காதில் விழுந்தது என்ன வார்த்த? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1965 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், நாகேஷ், டி.எஸ்.பாலைய்யா, முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “திருவிளையாடல்”. இத்திரைப்படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். கே.வி.மகாதேவன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Thiruvilaiyadal

Thiruvilaiyadal

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் மிகப் பிரபலமான பாடல்களாக திகழ்கின்றன. “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா”,  “ஓரு நாள் போதுமா”, “பாட்டும் நானே பாவமும் நானே” போன்ற பாடல்களை உதாரணமாக கூறலாம்.

இதில் “ஒரு நாள் போதுமா” என்ற பிரபலமான பாடல் உருவானதற்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. அதாவது இத்திரைப்படத்தின் இயக்குனரான ஏ.பி.நாகராஜன், கவியரசர் கண்ணதாசனை ஒரு நாள் காலை வேளையில் அழைத்து ஒரு பாடலுக்கான சிச்சுவேஷனை கூறி அதற்கு பாடல் எழுதவேண்டும் என கூறினார்.

Kannadasan

Kannadasan

அன்று காலை முதல் கண்ணதாசன் சிந்தித்துக்கொண்டே இருந்தார். ஆனால் பாடல் வரிகள் பிறக்கவே இல்லை. காலையில் காலை உணவை சாப்பிட்ட கண்ணதாசன், மதிய நேரத்தில் வந்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டார். ஆனால் அவ்வளவு நேரமாகியும் பாடல்தான் வரவில்லை.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வரணும்ன்னா இவ்வளவு கோடி செலவு செய்யனும்!! துள்ளியமாக கணக்கு போட்ட பிரபல பத்திரிக்கையாளர்…

Oru Naal Pothuma song

Oru Naal Pothuma song

இவ்வாறு வெகு நேரம் ஆகியும் பாடல் வரவில்லை என்பதால் கண்ணதாசனை பார்த்து “என்ன கவிஞரே, பாட்டெழுதுறதுக்கு இன்னைக்கு ஒரு நாள் போதுமா? இல்லை இன்னும் ஒரு நாள் வேண்டுமா?” என்று அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டாராம். அவர் அப்படி கேட்டவுடன், அவர் கேட்ட கேள்வியை பல்லவியாக வைத்தே முழு பாட்டையும் எழுதி முடித்து விட்டார் கண்ணதாசன். அப்படி அவர் எழுதிய பாடல்தான் “ஒரு நாள் போதுமா” என்ற கிளாசிக் பாடல்.

google news
Continue Reading

More in Cinema History

To Top