Connect with us

Cinema News

பொன்னியின் செல்வனை பிளான் போட்டு தூக்கிய கேஜிஎஃப் தயாரிப்பாளர்… இவ்வளவு வன்மமா??

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த 30 ஆம் தேதி வெளியான நிலையில், இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலக அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடியையும் தாண்டி வசூல் செய்து வருகிறது இத்திரைப்படம்.

இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியான நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வசூல் மிகவும் குறைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியாக ஒரு அதிர்ச்சியூட்டும் காரணம் ஒன்றை கூறுகிறார்களாம்.

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியான அதே நாளன்று கன்னடத்தில் “கன்டாரா” என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை ரிசப் ஷெட்டி இருக்கியிருக்கிறார். ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. “கே ஜி எஃப்” திரைப்படத்தை தயாரித்ததும் ஹோம்பேல் நிறுவனம்தான்.

இந்த நிலையில் ஹோம்பேல் நிறுவனம் கர்நாடக அமைச்சர்களுடன் இருக்கும் தங்களது தொடர்புகளை பயன்படுத்தி, “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை திரையிட்டு வரும் திரையரங்குகளில் “கன்டாரா” திரைப்படத்தை திரையிட திட்டமிட்டதாம். அதன் படி சில திரையரங்குகளில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டதாம். இதனால்தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வசூல் கர்நாடகத்தில் சரிவை கண்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

எனினும் “கன்டாரா” திரைப்படம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்நாடகத்தில் ஒரு மாபெரும் வெற்றித்திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top