Categories: latest news

விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

அப்பா விஜய்க்கு எதிராகத்தான் மகன் சஞ்சய் விஜய் இயக்குநராக போகிறார் என்கிற பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதற்கு ரசிகர்கள் தயங்கி வருகின்றனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு படம் எடுக்க லைகா வாய்ப்பு கொடுத்த நிலையில், லால் சலாம் எனும் ஹார்ட் டிஸ்க் தொலைந்த காவியத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதே போல விஜய்யின் வாரிசும் முதல் படத்தை எப்படி இயக்குவார் என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய்யை பகைத்துக் கொள்வது போல ஆகிவிடுமோ என நடிகர்கள் நினைத்து ஓகே சொல்ல மறுத்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!

அப்பா விஜய் மூலம் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்தால் அவரை ஹீரோவாக்க கூட பல பிரபலங்கள் தயாராக இருப்பதாகவும் விஜய்யை எதிர்த்து எதையும் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக கூறுகின்றனர்.

சஞ்சய் நடிப்பில் கவின் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் நோ சொல்லி எஸ்கேப் ஆகி விட்டாராம். துருவ் விக்ரம், அதிதி ஷங்கரை வைத்து சஞ்சய் படம் எடுப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், துருவ் விக்ரமும் நடிக்கப் போவதில்லை என நைஸாக கழந்து கொண்டு விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மகனை களம் இறக்கி காணாமல் போன தயாரிப்பாளர்!.. எவ்வளவு ஹிட் கொடுத்த மனுஷன்!..

மாவீரன் படத்தை விஜய்யின் மனைவி சங்கீதா தியேட்டருக்கு எல்லாம் சென்று பார்த்ததே சிவகார்திகேயனை வைத்து பெரிய படத்தை தனது மகன் இயக்கி ஒரே படத்தில் பெரிய இயக்குநராக வரவேண்டும் என்கிற ஐடியாவில் தானாம். ஆனால், ஜேசன் சஞ்சய் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் தான் கவின் பக்கம் அவர் திருப்பி விட்டதாக கூறுகின்றனர்.

லைகா அறிவிக்கும் படங்கள் எல்லாம் இப்படி ஆரம்பிக்காமலும் ஆரம்பித்தால் சொதப்பியும் ஏன் போகின்றன என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு விஜய் மகன் சஞ்சய்க்கு ஒரு ஹீரோ கூட கிடைக்காமல் லைகா ஆபிஸ் ரூமிலேயே கதையை திருத்தும் பணியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago