ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

by Saranya M |
ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..
X

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திடீரென தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்தித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனத்தின் தொடங்கி கே.எஸ். ரவிக்குமார் புதிய படங்களை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

ஏற்கனவே தனது தயாரிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்து வெளியான கூகுள் குட்டப்பா படத்தை தயாரித்து நடித்திருந்தார். அந்த படத்தை அவரது உதவி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் சூர்யா கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட் லிஸ்ட் படத்தை புரமோட் செய்வதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு படத்தில் டீசர் மற்றும் டிரைலர் உள்ளிட்ட காட்சிகளை போட்டுக்காட்டி அவர்களது வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’ கற்றுக் கொடுத்த பாடம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘குட் பேட் அக்லி’!

விஜய் கனிஷ்கா, கௌதம் மேனன், ஸ்ம்ருத்தி வெங்கட், முனீஸ் காந்த் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரபரப்பான கதையை அம்சத்துடன் கொண்ட படமாக ஹிட் லிஸ்ட் படம் இருக்கும் என கே.எஸ். ரவிக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டு கலகலப்பாக பேசிய வீடியோக்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் மீண்டும் வந்து விட்டாரா? அல்லது சென்னையில் படப்பிடிப்பில் இருக்கும் போது எடுத்த வீடியோவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாடிவாசலுக்கு தேதி குறித்த வெற்றிமாறன்!.. ஐயோ பாவம் சூர்யா!.. எத்தனை வருஷம் ஆகுமோ!..

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C68y46OSiE-/

Next Story