வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க அரசன் என்கிற படம் சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. வேகவேகமாக படத்தின் புரமோ வீடியோவை எடுத்தார்கள். ஆனால் அந்த வீடியோ வெளியாகவே பல நாட்கள் ஆனது. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் மூன்று படங்கள் நடித்து கொடுப்பதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கிய சிம்பு ஒரு படம் மட்டுமே நடித்தார்.
அதன்பின் அவருக்கு சிம்பு கால்சீட் கொடுக்கவில்லை. எனவே அரசன் படத்தை தொடங்கினால் ஐசரி கணேஷ் பிரச்சனை செய்வார் என்பதால் அவரிடம் தொடர்ந்து வெற்றி மாறனும், அரசன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் பேசி வருகிறார்கள். இதனால்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது வரை துவங்கப்படவில்லை.
ஐசரி கணேசனை ஓரளவு கன்வின்ஸ் செய்துதான் அரசன் படத்தின் புரமோ வீடியோவை வெளியிட்டார்கள் என்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சிம்புவும், இயக்குவது தொடர்பாக வெற்றிமாறனும் கலைப்புலி தாணுவிடம் சம்பளம் கேட்ட விவகாகரத்தில் கலைப்புலி தாணு கடுப்பாகி சில நாட்கள் படத்தை கிடப்பில் போட்டார். அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டது. தற்போது ஐசரி கணேஷ் பிரச்சனை தொடங்கியிருக்கிறது.
சிம்புவோ புரமோஷன் வீடியோவில் நடித்து கொடுத்துவிட்டு துபாய்க்கு போய் விட்டார். கடந்த பல மாதங்களாகவே சிம்பு துபாயில்தான் இருக்கிறார். ஏற்கனவே நவம்பர் 24ம் தேதி அரசன் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என சொன்னார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்நிலையில் வருகிற 8ம் தேதி அரசன் படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதற்கு ஐசரி கணேஷ் ஒத்துக்கொள்ள வேண்டும். சிம்பு துபாயிலிருந்து வர வேண்டும். இதுவெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
