Cinema History
ரஜினிக்கு வெங்கட்பிரபு போட்ட ரூட்…! தட்டிப் பறித்த நெல்சன்..! நம்பியாராக மாறிய அந்த இயக்குனர்
சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்துப் படம் இயக்கலாம் என நப்பாசையுடன் இருந்த இயக்குனர்… ஆனால் தட்டித் தூக்கியதோ அவரு..!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த டைம் டிராவல் படம் மாநாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரறே்பைப் பெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவும் சிம்புவுடன் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார். அது முதல் அவர் நடிப்பு அரக்கன் ஆகி விட்டார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரவு தான் அடுத்து ரஜினி பட டைரக்டர் என்ற பேச்சு அடிபட்டது.இது பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
மாநாடு படத்தைப் பார்த்துட்டு போன் பண்ணி ரஜினி சார் பாராட்டுனாரு. ரொம்ப என்கரேஜ்மென்ட் கிடைச்ச மாதிரி இருந்தது. மாநாடு படத்துக்கு அப்புறம் ரஜினி சாருக்கிட்ட பேசுனோம். சும்மா கேசுவலா பேசுனோம். நான் ஒரு ஐடியா சொன்னேன். என்ன பண்ணலாம்? ஏது பண்ணலாம்னு பேசுனோம். ஆனா எதுவும் மெட்டீரியல் இல்ல. ஒரு ஐடியாவோட சொன்னேன்.
ஆனா அவரு கொஞ்சம் கான்ட்ரோவர்சியலா இருக்குன்னு பீல் பண்ணினாரு. வேறொரு ஐடியாவுல கேட்டுருந்தாங்க. அதுக்கு அப்புறமா நெல்சன் வந்தாரு. பொதுவா என்ன பண்ணலாம்? என்ன நினைக்கிறாங்கன்னு நிறைய பேசினோம். ஏற்கனவே எனக்கு மாநாடு தெலுங்கு, இந்தின்னு போய்க்கிட்டு இருந்தது. சரி. இதுல என்ன நடக்குது? ஏது நடக்குதுன்னு பார்க்கலாம்னு இருந்தேன்.
திடீர்னு அவரு கூப்பிட்டு ‘ஓகே’ன்னு சொன்னாருன்னா நல்லாருக்குமேன்னு சின்ன நப்பாசை தான். ஆனா அதுக்குள்ள நெல்சன் அப்படின்னு நம்பியார் மாதிரி முழிச்சிக்கிட்டு கையைப் பிசைந்தார் வெங்கட்பிரபு. தொடர்ந்து ஆனாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம். நெல்சன் ஒரு நல்ல டைரக்டர். ரஜினி சாரிடம் இருந்து இன்னொரு கலர், ஹியூமர் சென்ஸைக் கொண்டு வந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் சூப்பர்ஸ்டார் ரஜினியை வேறொரு கோணத்தில் காட்டிய படம் ஜெயிலர். படத்தில் ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதே போல வில்லனும் கெத்து தான். இந்தப் படம் வசூல் சாதனையும் படைத்தது. படத்தில் வா காவலய்யா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் மறக்க முடியாது. அது ரசிகர்களின் நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றியது.