ரஜினி 173 படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். நேற்று சோசியல் மீடியா முழுவதும் இந்த செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையில் நெட்டிசன்கள் இது சம்பந்தமான மீம்ஸ்களை பதிவிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல இது பற்றி கிண்டலடித்து வருகின்றனர்.
ஒரு நெட்டிசன் ரஜினியையும் குஷ்பூவையும் வைத்து ஒரு மீம்ஸ் கிரியேட் செய்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு தரமான பதிலடியும் கொடுத்திருக்கிறார் குஷ்பூ. ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்க சுந்தர் சி இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் போடப்பட்டது.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து ரஜினியை மீண்டும் இயக்க போகிறார் சுந்தர் சி என ஒரு பக்கம் ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சண்டை , அடிதடி, வெட்டு என வன்முறை சார்ந்த படங்களையே பார்த்த ரசிகர்களுக்கு சுந்தர் சி ரஜினி காம்போ ஒரு வரப்பிரசாதமாக கிடைத்தது. 90ஸ் ரஜினியை பார்க்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென இந்தப் படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் கணத்த இதயத்துடன் இதை கூறுகிறேன் என்றும் சுந்தர் சி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது திரையுலகினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில் நெட்டிசன் ஒருவர் ‘ஒருவேளை சுந்தர் சி ரஜினி 173 படத்தில் குஷ்பூவை ஐட்டம் ஆடலுக்கு ஆட சொல்லியிருப்பார். அதனால்தான் ரஜினி இந்தப் படம் வேண்டாம் என சொல்லியிருப்பார்’ என நக்கலாக ஒரு மீம்ஸை போட்டிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பூ ‘இல்ல, உங்க வீட்ல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்’ என அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமெண்ட் செய்திருக்கிறார். இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்றே தெரியாமல் நெட்டிசன்கள் இப்படி செய்வது மிகவும் அநாகரிகமாக இருக்கிறது. இதை உடனே நிறுத்த வேண்டும்.