நீ 300 கோடில இப்படி ஒரு படம் எடுத்ததே பெரிய ஊழல்தான்!.. ஷங்கரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

0
121

ஷங்கரின் இயக்கத்தில் நேற்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் இந்தியன் 2. 1996ம் வருடம் வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. 80 கிட்ஸ்களுக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததால் படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது 90 மற்றும் 2கே கிட்ஸ்களே அதிகம் தியேட்டருக்கு போகும் நிலையில் இந்தியன் 2 வெளியாகி இருக்கிறது.

ஆனால், இந்தியன் 2 படம் 90 மற்றும் 2கே கிட்ஸ்களுக்கு பிடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியன் படத்தை ரசித்த 70 மற்றும் 80 கிட்ஸ்களுக்கே இந்தியன் 2 பிடிக்கவில்லை. படம் எதிர்பார்த்தது போல் இல்லை.. படத்தில் கதையே இல்லை, என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என பலரும் சொல்கிறார்கள்.

ஒருபக்கம், இந்தியன் 2-வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருந்தார். ஆனால், இந்தியன் 2-வில் இசை சிறப்பாக இல்லை என்றே பலரும் சொல்கிறார்கள். இந்த படத்தை பார்த்த பலரும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

‘டேய் நீ 300 கோடில இப்படி ஒரு படம் எடுத்ததே பெரிய ஊழல்தண்டா’ என மீம்ஸ் போட்டிருக்கிறார். ஒருபக்கம் டிவிட்டரில் Indian2disaster என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் இப்படத்தை கிண்டலடித்து பதிவிட்டு வருகிறார்கள். முதல் பாகத்தின் கிளைமேக்சில் சந்துருவுடன் சேர்ந்து சேனாதிபதியும் சாவது போல சுஜாதா கதை எழுதி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இப்போது இந்தியன் 2 எடுத்திருக்கும் அவசியமே வந்திருக்காது என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருவர் இந்தியன் 2 படம் ஏமாற்றி இருக்கிறது. கமல் ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும் இந்த படத்தை அவராலாயே காப்பாற்ற முடியாது. கதை ஒன்றுமே இல்லை. இயக்குனர் ஷங்கரை எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ஒருபக்கம் அம்பானி மகன் திருமணத்தில் ரஜினி நடமாடுவதை பகிர்ந்து ‘இந்தியன் 2 பட தோல்வியை தலைவர் நடனமாடி கொண்டாடுகிறார்’ என சிலர் பதிவிட்டுள்ளனர்.

பல தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காற்று வாங்கி இருக்கிறது. எனவே, முதல்நாள் பெரிய வசூலும் இல்லை என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கமலை பிடிக்லாமல் ரஜினி ரசிகர்கள் இப்படி கருத்து பரப்புகிறார்களா?.. இல்லை உண்மையிலேயே படம் அப்படித்தான் இருக்கிறதா? என்பது இந்த வார இறுதிக்கு பின் தெரிந்துவிடும்.

google news