">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இவ்வளவுதாங்க… இதுக்குமேல கூடாது… ஷங்கருக்கு செக் வைத்த தயாரிப்பாளர்
இயக்குனர் ஷங்கர் – ராம்சரண் முதல்முறையாக இணையும் படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.�
பிரமாண்டங்களுக்குப் பெயர் போன இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஷங்கர் படமென்றாலே பட்ஜெட் எகிறும் என்பது சினி ஃபீல்டில் இருக்கும் ஒரு பேச்சு.
ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக எடுக்க ஆசைப்படும் ஷங்கர், அதற்காக மெனக்கெடுவதோடு நிறைய செலவும் ஆகும். இந்தநிலையில், ராம்சரண் படத்துக்கு பட்ஜெட் இவ்வளவுதான் என இயக்குனர் ஷங்கரிடம் தயாரிப்பாளர் தில் ராஜூ கறார் காட்டியிருக்கிறாராம். ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதற்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தில் ராஜூ கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அதற்கு ஷங்கரும் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Excited to be a part of Shankar Sir’s cinematic brilliance produced by Raju garu and Shirish garu.
Looking forward to #RC15 ! @shankarshanmugh @SVC_official #SVC50 pic.twitter.com/SpjOkqyAD4
— Ram Charan (@AlwaysRamCharan) February 12, 2021