Jananayagan: விஜயின் சினிமா கெரியரில் கடைசி படமாக பார்க்கப்படும் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் அதாவது இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. சுமார் 85 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இந்த அரங்கின் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இந்த விழாவை காண ரசிகர்கள் வருவதால் காலை முதல் மாலை வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஜயின் நடிப்பில் வெளியான பல படங்களிலிலிருந்தும் ஹிட் பாடல்கள் அந்த பாடல்களை பாடிய அதே பாடகர்கள் இங்கே பாடவிருக்கிறார்கள்.
ஒருபக்கம்ம், தமிழகத்திலிருந்தும் விஜய் ரசிகர்களை கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இசை நிகழ்ச்சிகளுக்கு இடையே அல்லது முடிவில் ஜனநாயகன் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜயின் கடைசி ஆடியோ லான்ச் என்பதால் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. துவக்கத்தில் ரஜினி, கமல், அஜித் பெயரெல்லாம் இதில் அடிபட்டது. உண்மையில் அவர்கள் யரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
அதேநேரம் அஜித்தை வைத்து படமெடுத்த அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இவர்கள் மூவரும் ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியில் பத்திரிக்கையாளர்களாக நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோக, விஜயின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருக்கும் சஞ்சீவ் உள்ளிட்ட சிலரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
