Connect with us
prabu

Cinema News

ரஜினி, கமலுக்கு அப்புறம் தம்பி அஜித்தான்!.. அட நம்ம பிரபுவே இப்படி சொல்லிட்டாரே!…

அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித் குமார். பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்தார். துவக்கத்தில் இவர் நடித்ததில் பெரும்பாலானவை காதல் திரைப்படங்கள்தான். ஒருகட்டத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக பில்லா திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. மங்காத்தா திரைப்படம் இவரை மாஸ் நடிகராக மாற்றியது. இந்த படத்திற்கு பின்னர்தான் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். ஆனாலும், தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்துவிட்டார். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

இப்போது விஜய்க்கு நிகராக ரசிகர்களை கொண்டிருக்கிறார். அதுவும் விஜய் படம் வெளியாகும்போதே தனது படத்தை துணிந்து வெளியிடுகிறார். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் என்பதை தாண்டி பக்கா ஜென்டில்மேன் என்கிற பெயர் அஜித்துக்கு இருக்கிறது. எல்லோரிடமும் கண்ணியமாக, மரியாதையாக பேசுவது அஜித்துன் வழக்கம். தன் படங்களில் நடிக்கும் மூத்த நடிகர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்து நடந்து கொள்வார் என திரையுலகில் பலரும் சொல்வதுண்டு.

இதையும் படிங்க: அஜித் இப்படி சொல்லுவாருனு நினைச்சு கூட பார்க்கல! ‘நாடோடி’ பட நடிகை பகிர்ந்த சூப்பர் தகவல்

ஒருமுறை பில்லா பட செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் பிரபு ‘ரஜினி அண்ணனும், கமல் அண்ணனும் என்னிடம் எப்போதும் மிகவும் அன்பாக பழகுவார்கள். நான் அவர்களின் வீட்டுக்கு போனால் கார் வரை வந்து என்னை வழியனுப்பி வைப்பார்கள். அதன்பின் அந்த விஷயத்தை நான் தம்பி அஜித்திடம்தான் பார்த்தேன்’ என அவரை பாராட்டி பேசியிருந்தார்.

பில்லா, பி்ல்லா 2, அசல் ஆகிய திரைப்படங்களில் அஜித்துடன் பிரபு நடித்திருக்கிறார். ஆனால், அதன்பின் அஜித்தும் பிரபுவும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இன்னும் கூடிவரவில்லை.

இதையும் படிங்க: கடைசியில ஏகே-வும் இதுல சிக்கிட்டாரே! – ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அல்வா கொடுக்க காரணம் இதுதானாம்!..

Continue Reading

More in Cinema News

To Top