Connect with us
enthiran

Cinema News

ஷூட்டிங் கிளம்பி ராங் ரூட்டில் போய் டிராபிக்கில் சிக்கிய ரஜினி!.. அப்புறம் நடந்துதான் ஹைலைட்!…

ஜெயிலர் படம் மூலம் தானே சூப்பர்ஸ்டார் என மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. அரசியல்ரீதியாக ரஜினி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் நடிப்பு என வந்துவிட்டால் நடிகர் ரஜினி எவ்வளவு சின்சியராக இருப்பார் என்பதை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் எந்திரன். இப்படத்தின் ஒரு காட்சியை மீஞ்சூர் கடற்கரையில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு காட்சி.. நீங்கள் இந்த வழியாக வந்தால் டிராபிக் இல்லாமல் வந்துவிடலாம் என ரஜினியின் உதவியாளரிடம் ஏற்கனவே சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரேயடியா சோப்பு போட்ட சன் பிக்சர்ஸ்!.. உங்க சங்காத்தமே வேண்டாம்னு முடிவு பண்ண விஜய்!..

ஆனாலும், நாம் முன்பே போய்விடுவோம் என நினைத்த ரஜினி 2 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், அவர்கள் எந்த வழியில் சொன்னார்களோ அதில் போகாமல் கார் வேறு பாதையில் சென்றுவிட்டது. ஒரு இடத்தில் செம டிராபிக். முன்னாலும் பின்னாலும் லாரிகள். சுமார் இரண்டரை மணி நேரம் காரிலேயே இருந்துள்ளார் ரஜினி. 6 மணி ஆகிவிட்டது.

உதவியாளரிடம் கோபமடைந்த ரஜினி காரின் கீழே இறங்கிவிட்டார், தன்னை யாரும் அடையாளம் கண்டிகொள்ளக்கூடாது என நினைத்த ரஜினி ஒரு துண்டால் தலையில் கட்டிக்கொண்டார். எதாவது பைக் வந்தால் லிஃப் கேட்டு போய்விடலாம் என காத்திருந்தார்.

இதையும் படிங்க: விஜயால் அப்செட்! இதுக்கு உடனே அஜித்தை கூப்பிடுங்க!… ரஜினியின் திடீர் ஆசை..

அப்போது அந்த வழியாக ஒரு டிராபிக் போலீஸ் வந்துள்ளார். அவரிடம் ‘நான் ரஜினி. ஷூட்டிங் லேட் ஆகிவிட்டது. என்னை இந்த இடத்தில் விட்டு விட முடியுமா?’ என அவர் கேட்க அந்த போலீஸ்காரர் நம்ப வில்லையாம்.

ஒருவழியாக அவருக்கு புரிய வைக்க அவருக்கோ ஆச்சர்யம். ‘நீங்கள் உட்காருங்கள்’ என சொல்லி அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தாமதமாக வந்ததால் குற்ற உணர்ச்சியில் இருந்த ரஜினி ஷங்கரை பார்க்கவே சங்கோஜப்பட்டாராம். இது தெரிந்து ஷங்கரே அவரிடம் வந்து பேசி ‘பரவாயில்லை சார்.. இது நடப்பது இயல்புதான்’ என சொல்லி அவரை இயல்பாக்கிய பின்னர் 7.30 மணிக்கு அந்த காட்சியை எடுத்தார்களாம்.

இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் ரஜினியிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்!..

இதையும் படிங்க: ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top