சீரியல் நடிகையின் காதலர் இவரா? - அவரே வெளியிட்ட புகைப்படம்
Tue, 5 Jan 2021

ரோஜா சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து தாய்மார்களின் கோபத்திற்கு உள்ளாகி வருபவர் நடிகை ஷாமிலி சுகுமார். மேலும், பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், புடவையில் ஒருவருடன் நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ‘இவர்தான் எல்லாம்’ என குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த நபர்தான் அவரின் காதலராக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
எனவே, நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.