Connect with us

Cinema News

தேர்தல் முடிந்து அஜித் எங்கே போயிருக்காருன்னு பாருங்க!.. கழுத்துல மாலை வேற!.. அப்போ விடாமுயற்சி?

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தனது நண்பர்களுடன் பைக் டூர் சென்று இருப்பதாகவே தெரிகிறது.

ஆணழகன், அல்டிமேட் ஸ்டார், தல, ஏகே என ரசிகர்கள் நடிகர் அஜித் குமாரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேரை வைத்து அழைத்து வந்தனர். ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொடர்ந்து விஜய் அஜித் போட்டி மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருவரும் முன்னணி நடிகர்களாக மாறினர்.

இதையும் படிங்க: சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..

நடிகர் விஜயின் சம்பளம் ஏறும் போதெல்லாம் நடிகர் அஜித்குமாரின் சம்பளமும் அதற்கு ஏற்ப ஏறி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் அஜித்தை வைத்து படங்களை தயாரித்தால் முதல் நாளிலேயே பாதிக் காசை அள்ளி விடலாம் என தயாரிப்பாளர்கள் தைரியமாக இவர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் விடாமுயற்சி திரைப்படம் தொடங்கப்பட்ட நிலையில், அந்த படம் இன்னமும் படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை.

இதையும் படிங்க: நண்பர்களிடம் ரஜினிகாந்த் விட்ட ரீல்… எப்படி சிக்கினார் தெரியுமா?

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துவிட்டு, அடுத்ததாக கோட் படத்திலும் நடித்து முடிக்க உள்ளார். மேலும் அந்தப் படத்தில் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து விட்டனர். ஆனால் இன்னமும் விடாமுயற்சி கதை என்ன ஆனது என்று தெரியவில்லை.

சுரேஷ் சந்திரா மற்றும் லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தில் டூப் போடாமல் அஜித்குமார் விபத்து ஸ்டன்ட் காட்சியில் நடித்த பதைபதைக்கும் வீடியோவை வெளியிட்டு விடாமுயற்சி படம் டிராப் ஆகவில்லை என்றனர். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அந்தப் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் அஜித்குமார் வட இந்திய கோயில் ஒன்றில் சாமி கும்பிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்து லைஃப்-ஐ தொலைத்த 5 இயக்குனர்கள்!.. படம் பண்ணி பல வருஷம் ஆச்சே!..

பைக் டூர் செல்லும்போது அணியும் முறையை அவர் அறிந்து கொண்டு இருக்கும் நிலையில், ஓட்டு போட்டுவிட்டு மீண்டும் வட இந்தியாவுக்கு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாரா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஆரம்பித்து விடும் என்றும் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top