Connect with us

Cinema News

எங்கே செல்லும் இந்த பாதை ஏகே!.. எந்த முயற்சியும் இல்லாமல் வந்த விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!..

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. லைகா நிறுவனத்துக்கும் நடிகர் அஜித் குமாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் அதற்கு காரணம் என்றும் விடாமுயற்சி திரைப்படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின.

இதையும் படிங்க: கவுண்டமணியோடலாம் எப்படி நடிச்சாங்கன்னே தெரியல!… இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி!.

உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படத்துக்காக அஜித் எந்த அளவுக்கு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார் என்பதை காட்டுவதற்காக அஜர்பைஜானில் அஜித் மற்றும் ஆரவ் காரில் செல்லும் போது பல்டி அடித்து விபத்துக்குள்ளான காட்சி ஒன்றை வெளியிட்டார்.

நிதி நெருக்கடியால் லைகா நிறுவனம் தவித்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால், இந்தியன் 2, வேட்டையன் என அடுத்தடுத்து பெரிய படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது.

இதையும் படிங்க: வடிவேலு கதை தான் விஜய்க்கும்…! அரசியல்ல அவரு தாக்குப்பிடிக்க முடியாது… பிரபலம் கணிப்பு

மகிழ்ச்சி திருமேனி, அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற நிலையில், தற்போது அதிரடியாக சாலையில் நடிகர் அஜித்குமார் செம கெத்தாக நடந்து வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதை பார்த்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி எந்தவொரு முயற்சியும் இல்லாமல் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது என விமர்சித்துள்ளார். விஜய் ரசிகர்களும் ”எங்கே செல்லும் இந்த பாதை” என கலாய்த்து வருகின்றனர்.  குட் பேட் அக்லி போஸ்டரை வைத்து சாதனை படைத்தது போல அஜித் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: இதனாலதான் இவர் காலில் நான் விழுந்தேன்!. நடிகரிடம் சொன்ன கேப்டன் விஜயகாந்த்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top