தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய் பேசுபொருளாகி விட்டார். சமீபத்தில் நடந்த விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெரிய அளவில் விஜய் பேசப்படுவார்னு பார்த்தா அவரைப் பற்றி மட்டும் தான் பேசுனாங்க. ஆனா அவரு அதையும் தாண்டி பெரிய அளவில் எதையும் பேசவில்லை.
மாறாக அவர் சாப்பாடு போட்டதும், மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதும் தான் பேசு பொருளானது. இது தவிர வேறு எதுவுமே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இதையும் படிங்க… கவுண்டமணி, வடிவேலுவால் கூட தொட முடியாத சாதனை.. அசால்ட்டா பண்ணும் நடிகர்! கோவை சரளா பகிர்ந்த சீக்ரெட்
விஜய் சினிமாவில் இருந்து இறங்கி அரசியலுக்குள் வருவது அதாவது வாழ்வியலில் இருந்து இறங்கி வருவது அவருக்கு என்னன்னே தெரியாமல் இருக்கும். இது இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலுவைக் காட்டுவார்கள். அவருக்கு எல்லாமே வித்தியாசமாகத் தான் தெரியும். அப்படிப்பட்ட வகையில் தான் விஜய் வருவாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
சமீபத்தில் விஜய் நல்ல அரசியல் தலைவர்கள் வரணும்னு சொல்றாங்க. நல்ல அரசியல் தலைவர்கள் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள் பலர் இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி இவர் எதைச் சொல்றாருன்னு எனக்குத் தெரியல. பேசணும்கறதுக்காகப் பேசறாரு.
விஜய் ஒரு வேளை வடிவேலு கணக்குல வந்துருவாரோன்னு சில அரசியல் நோக்கர்களும் சொல்றாங்க. எல்லாரும் எம்ஜிஆரைத் தான் முன்நிறுத்துவாங்க. பாக்கியராஜ் அப்படித்தான். அவருக்கு எம்ஜிஆர் தொப்பி போட்டுத் தான் படம் போட்டாங்க. எடப்பாடிக்கு அப்படித்தான். விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர்னே சொன்னாங்க.
விஜயை அடுத்த காமராஜர்னு எல்லாம் கொஞ்சம்கூட நா கூசாம பேசறாங்க. இவர் ஒரு நாலுபேருக்கு ஊக்கத்தொகை கொடுக்கறாருங்கறதுக்காக காமராஜர் மாதிரி பேசறது அவருக்கு செய்யக்கூடிய இழுக்குன்னு தான் நான் பார்ப்பேன்.
சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாருமே இன்னைக்கு தடுமாறிக்கிட்டு இருக்காங்க. உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. இன்னைக்கு வரை அவரைவிட திறமையான நடிகர்கள் யாரும் வரவில்லை. மீம்ஸ்ல முழுக்க முழுக்க வடிவேலு தான் கொடிகட்டிப் பறந்துக்கிட்டு இருக்காரு. இன்னைக்கு சினிமாவை விட்டு போயிட்டு 14 வருஷமாச்சு. அதுக்கு அப்புறம் அவரு விட்ட இடத்தை இல்ல. கிட்டவே நெருங்க முடியல.
மாமன்னன் கூட மாரி செல்வராஜின் கதைக்காகத் தான் அவர் பேசப்பட்டார். அதே நேரத்துல விஜய் சினிமாவை விட்டு இதே மாதிரி வந்தாருன்னா என்ன ஆகும்? அரசியலுக்கு வந்து முட்டி மோதுவாரு. இதை எல்லாம் தாண்டி மக்கள் மனசு வச்சாத்தான் ஓட்டுப் போடுவாங்க. மக்கள் முழுமையான அரசியல தெரிஞ்சி வச்சிருக்காங்க.
இதையும் படிங்க… யாரு விஜய்க்கு இப்படி தப்பான அட்வைஸ் பண்றாங்க? சுசித்ராவின் கிண்டல்… கொந்தளித்த ரசிகர்கள்!
முகத்துக்கு, அழகுக்கு எல்லாம் ஓட்டுப் போட மாட்டாங்க. இன்னைக்கு அவர் சினிமாவை விட்டு வந்தாருன்னா அந்த இடத்துக்கு வேற ஒருத்தர் வரலாம். அப்படி இருக்கும்போது விஜய் சினிமாவையும் தக்க வைக்க முடியாது. அரசியலிலும் பின்னடைவுன்னா அரசியலையும் தக்க வைக்க முடியாது.
அப்புறம் தடுமாறும் சூழல் வரும். அது பெரிய கேள்விக்குறியாகவும் மாறலாம். எந்தவித கொள்கையும் சொல்லாம, அரசியல் புரிதலும் இல்லாம ஆட்சிக்கு வந்தால்… வாய்ப்பில்லை… அப்படி வந்துட்டாங்கன்னா அது மக்களுக்கு ஆபத்து. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.