×

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார் அமிதாப் பச்சன்?

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் ஜெயா பச்சனை தவிர அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

 

தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடுப்பதில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.

இந்நிலையில் தற்ப்போது ரசிகர்களின் வேண்டுதலின் படி  நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு நெகடிவ் என்று வந்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.  அவர் தற்போதைக்கு மருத்துவமனையில் இருந்து  அனுப்பப்பட உள்ளதாக என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியது. ஆனால், இது பொய்யான தகவல் என அமிதாப் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

null

From around the web

Trending Videos

Tamilnadu News