×

பிக்பாஸுக்கு அனுப்பினது தப்பு... நிஷா போடுற ட்ரஸ் எனக்கு பிடிக்கல - கணவர் வருத்தம்...!!

அறந்தாங்கி நிஷா  பிக்பாஸில் பங்கேற்றது குறித்து கணவர் வருத்தம்.

 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

நிஷா தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.  கூடவே சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷாவை அனைவருக்கும் பிடிக்கும்.

இவர்களுக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் இருக்கின்றனர். மகள்  சஃபா ரியாஸ் கடந்த வருடம் தான் பிறந்தார். பார்ப்பதற்கு அப்படியே குட்டி நிஷாவை போலவே இருப்பார். தற்ப்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளதை குறித்து கூறிய அவரது கணவர், " நிஷா அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் ரியோ, ரமேஷ், அர்ச்சனா, சோமுடன் சேர்ந்து அத்தனையும் கெடுத்துக்கொள்கிறார். அத்தோடு பிக்பாஸ் வீட்டில் நைட்டி அணியாதே என்று நான் சொல்லி அனுப்பினேன் ஆனால், அவர் எப்போதும் நைட்டியிலே தான் இருக்கிறார் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News