×

அயனாவரம் சிறுமி வழக்கு - 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
 

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அயனாவர மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அயனாவரத்தில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியை 6 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டர். ஒருவர் விடுவிக்கப்பட்டார். எனவே, மீதமிருந்த 15 பேருக்கும் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 வருட தண்டையும், ஒருவருக்கு ஆயுள் தண்டையும், மற்ற 9 பேருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் அளித்து சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News