×

குக் வித் கோமாளி பிரபலத்தை கேலி செய்த நபர்... பதிலடி கொடுத்த பிரபலம்...  என்ன சொன்னார் தெரியுமா? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலைஞர்களான செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். போட்டியாளர்கள் சமைக்கும் உணவுகளை ருசி பார்த்து சிறந்த போட்டியாளரை தேர்வு செய்வதே இவர்களது பணியாகும். 
 
cook with komali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலைஞர்களான செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். போட்டியாளர்கள் சமைக்கும் உணவுகளை ருசி பார்த்து சிறந்த போட்டியாளரை தேர்வு செய்வதே இவர்களது பணியாகும். 

பிரபல சமையல் கலைஞரான வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சி மூலமாகவே சாதாரண மக்களுக்கு பரிச்சயமானார். இவரது சமையல் கலைக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம். மேலும் வெங்கடேஷ் பட் கோமாளிகளுக்கு இணையாக காமெடியும் செய்து வருவார். அவ்வபோது இவர் அடிக்கும் டைமிங் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

venkatesh bhat
venkatesh bhat

இதுதவிர செஃப் வெங்கடேஷ் பட் இதயம் தொட்ட சமையல் என்ற யூடியூப் சேனல் மூலம் தனது சமையல் கலையை பிறருக்கு கற்பித்து வருகிறார். அதேபோல் அவரது பேஸ்புக் பக்கத்திலும் சமையல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தீவிர கடவுள் பக்தரான வெங்கடேஷ் பட் தனது கையில் சாமி கயிறு கட்டியுள்ளார்.

இந்நிலையில், இதனை கிண்டல் செய்யும் விதமாக நபர் ஒருவர், "ஒரு மிகப்பெரிய செஃப், உணவு சமைக்கும் பொழுது கைககளில் கயிறு எல்லாம் கட்டிக்கொள்ளலாமா. கேட்டா பெரிய செஃப்"  என்று கமெண்ட் செய்திருந்தார். இதனை பார்த்த வெங்கடேஷ் பட் மிகவும் கூலாக அந்த நபருக்கு பதிலளித்துள்ளார். 

venkatesh bhat
venkatesh bhat

அவர் கூறியுள்ளதாவது, "முறைப்படி பார்த்தால் சமைக்கும்போது பேசவே கூடாது. ஆனால், டிவியில் அதை பின்தொடர முடியாது. அதுபோல என் கையில் கயிறு இருப்பது என் நம்பிக்கை. கற்றுக்கொடுப்பது நான் கற்ற விதை. நீங்கள் பார்க்க வேண்டியது என் திறமையை, கையில் உள்ள கயிற்றை அல்ல" என பதிவிட்டுள்ளார். செஃப் வெங்கடேஷின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News