×

மாஸ்டர் சிறப்பு... வலிமை அப்டேட் வேற லெவல்... கிரிக்கெட் வீரர் அஷ்வின்

சேப்பாக்கம் டெஸ்டில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த தன்னிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டதாக கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்திருக்கிறார். 
 

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பல இடங்களிலும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் அஜித்தே அதிருப்தி தெரிவித்திருந்தார். 


இந்தநிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் அப்படி ஒரு அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூறியிருக்கிறார். யூ டியூப் வீடியோவில் இதுகுறித்து பேசிய அஷ்வின், ``பவுண்டரி லைனில் நான் ஃபீல்ட் செய்துகொண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர், `தல அஷ்வின்... தல அஷ்வின்... வலிமை அப்டேட்’ என உற்சாகமாகக் கத்தினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அதுபற்றி கூகுளில் தேடியபோதுதான் சம்பவம் குறித்து புரிந்தது. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 


அதேபோல், பவுண்டரி லைனில் நின்றிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடமும் ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர் வந்து என்னிடம் `வலிமை’ என்றால் என்ன எனக் கேட்டார். தமிழ்நாட்டில் சினிமா என்று வந்துவிட்டால் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று தெரிந்துகொண்டேன். மாஸ்டர் சிறப்பான படம். ஆனால், இங்கிலாந்து வீரர் ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்பதெல்லாம் வேற லெவல். அது என் நினைவை விட்டு அகலவே மாட்டேன்கிறது’’ என்று மனம் திறந்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News