×

முதல்ல என்னக் கவனிம்மா... லைவ் டெலிகாஸ்டில் தாயைத் தேடிவந்த குழந்தை #CuteVideo

அமெரிக்க டிவி சேனல் ஒன்றில் லைவ் டெலிகாஸ்டில் வானிலை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்த தாயைத் தேடி வந்த குழந்தையின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏபிசி7 டிவி சேனலின் வானிலை முன்னறிவிப்பாளராகப் பணிபுரிபவர் லெஸ்லி லோபஸ். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் இவர் தினசரி இரவில் நேரலையில் வானிலை முன்னறிவிப்பு செய்வது வழக்கம். 

அந்தவகையில் நேற்று இரவு லைவ் டெலிகாஸ்டில் வானிலை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அவர் லைவில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது 10 மாதக் குழந்தை நோலன் தவழ்ந்தபடியே தாயைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

தாயைக் கண்டுபிடித்து அவரது காலுக்குக் கீழே வந்து குழந்தை எழுந்துநிற்க முயற்சி செய்தது. இந்த சூழலை சிரித்தபடியே சமாளித்த லெஸ்லி, `நேயர்களே எனது மகன் என்னைத் தேடி வந்துவிட்டான். நான் முழுமையாக கண்ட்ரோலை இழந்துவிட்டேன்’ என்று சமாளித்துவிட்டார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News