×

இந்த தொடரோடு தோனி ஓய்வு… அதனால்தான் இளம் வீரர்களுக்கு ஆட்டோக்ராப்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி இந்த தொடரோடு ஓய்வை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி இந்த தொடரோடு ஓய்வை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதனால் மீதியுள்ள போட்டிகளையாவது வெற்றியுடன் முடிக்க போராடி வருகிறது. இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

அதை நிருபிப்பது போல தோனி எல்லா போட்டிகளும் முடிந்த பின்னர் இளம் வீரர்களுக்கு தனது டிஷர்ட்டை அளிப்பது மற்றும் அதில் ஆட்டோகிராப் போட்டு தருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டி முடிந்த பின்னர் ஓய்வு முடிவை அவர் அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News