அந்த ஹீரோவுடன் இணையும் இயக்குனர் ராஜேஷ்.. அப்ப தியேட்டரே கதிகலங்கும்....
Mon, 28 Dec 2020

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெஹா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை ராஜேஷ் இயக்கும் வேலை துவங்கியது. ஆனால், திரைக்கதை, சம்பளம் என சில சிக்கல்களால் இப்படத்திலிருந்து சந்தானம் விலகி விட்டார். எனவே, ஜி.வி.பிரகாஷை வைத்து ராஜேஷ் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது மீண்டும் ஜீவாவை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படமாகும். மேலும், தொடர் தோல்வி படங்களை கொடுத்து வெற்றிப் படத்தை தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜீவாவுக்கு ராஜேஷ் படம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.