×

திரௌபதி படத்தைப் பார்த்துவிட்டு ஷாலினி யாரைப் பாராட்டினார் தெரியுமா ?

தமிழகத்தில் திரௌபதி படம் வெளியாகி பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த படத்தினை பார்த்துள்ளார் அஜித்தின் மனைவி ஷாலினி.

 

தமிழகத்தில் திரௌபதி படம் வெளியாகி பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த படத்தினை பார்த்துள்ளார் அஜித்தின் மனைவி ஷாலினி.

பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாரார் இது சாதி ஆதரவு படம் எனவும் மறுசாரார் இது நாடகக் காதலைப் பற்றி பேசும் உண்மையைப் பேசும் திரைப்படம் என சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள தனது தம்பி ரிச்சர்ட்க்காக இந்த படத்தை குடும்பத்தோடு பார்த்தார் அஜித்தின் மனைவி ஷாலினி. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. படம்பார்த்த பிறகு ஷாலினி படத்தின் இசையமைப்பாளரை பாராட்டியுள்ளார். இதை இசையமைபபாளர் ஜூபின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ‘திரௌபதி படத்தின் இசையை ஷாலினி மேடம் வெகுவாக பாராட்டி என்னிடம் பேசிய போது... Thank you shalini madam’  எனப் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News