×

‘சைக்கோ’ வேண்டாம், அஜித் படம் போடுங்க: மிஷ்கினின் கேட்ட இளம்பெண்

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக அனைத்து பகுதி விநியோகிஸ்தர்கள் கருத்து கூறி வருகின்றனர் 

இந்த நிலையில் இந்த படம் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவரின் கதையம்சம் கொண்டது என்பதால் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவருடன் மிஸ்கின் உரையாடும் நிகழ்ச்சி ஒன்றினை தனியார் இணையதளம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் நடந்த பேச்சுவார்த்தையில் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி பெண்ணிடம் மிஸ்கின் பேசியபோது ’உங்களைப் போன்றவர்களுக்காக ஒரு வெர்ஷன் சைக்கோ திரைப்படம் ஏற்பாடு செய்து இருக்கின்றோம். பிப்ரவரி 1ஆம் தேதி மற்றும் இரண்டாம் தேதி கோவையில் காட்சி நடைபெற உள்ளது. அந்த காட்சியை நீங்கள் பாருங்கள் என்று கூற அதற்கு அந்த இளம் பெண்ணோ, ‘எனக்கு அஜித் படம் தான் வேண்டும் விஸ்வாசம் படம் போடுங்கள் என்று கூறுகிறார் 

இதனால் தர்மசங்கடமான மிஸ்கின் பின்னர் சுதாரித்துக்கொண்டு ’அஜித் சார் அவர்களிடம் கேட்டு உங்களுக்காக நான் விஸ்வாசம் படத்தை போட ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி சமாளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News