×

தலைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஒ.பி.எஸ் மகன்...

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, ஒரு வாரமாகாவே அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்.
 

டிவிட்டரில் தனி டிபி உருவாக்கினர். நேற்று  #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங் செய்தனர். 

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இன்று பிறந்தநாள் காணும் நண்பர் அல்டிமேட் ஸ்டார் #அஜித்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News