×

இந்த படங்களை நான் ரிஜக்ட் செய்யவில்லை... நீங்களா ஏன் அடிச்சு விடுறீங்க.. காண்டான சாந்தனு

தமிழின் முக்கிய ஹிட் படங்களை சாந்தனு மிஸ் செய்ததாக கூறப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 
 
இந்த படங்களை நான் ரிஜக்ட் செய்யவில்லை... நீங்களா ஏன் அடிச்சு விடுறீங்க.. காண்டான சாந்தனு

தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு. இவர் வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து, நாயகனாக 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்திருக்கிறார். 

ஆனால் சாந்தனுவிற்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவரால் சினிமாவில் ஒரு இடத்தை இன்றும் பிடிக்க இயலவில்லை. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார். அப்படத்திலும் பெரிய கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. இதனால் அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் சாந்தனு, அந்த ட்ரோல்களுக்கும் சமீபத்தில் பதில் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில், சாந்தனுவின் சமீபத்திய ட்விட்டர் போஸ்ட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. சாந்தனுவும், அவரது தந்தை பாக்கியராஜும் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியன், காதல், களவாணி ஆகிய படங்களை ரிஜக்ட் செய்ததாக வெளியான ஒரு போஸ்ட்டை ரீட்வீட் செய்த சாந்தனு, இப்போது நீங்கள் தவறான தகவல்களைப் பரப்பியவுடன், இப்பதிவை பார்த்த அனைவரிடத்திலும் உண்மை தகவலைப் பரப்ப முடியுமா? உங்களைப் போன்றோரால் தான் இப்படி அடிப்படையற்ற வதந்திகள் பரவுகிறது. அதையும் மக்கள் நம்புகின்றனர். இவற்றில் எதுவுமில்லை “நிராகரிக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.


இந்த தகவல் பல வருடங்களாக உலா வந்த நிலையில், ஒரு வழியாக சாந்தனு இதற்கு பதில் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News