×

வாய்ப்புக்காக 4 வருடங்கள் படுக்கைக்கு அழைத்தனர் - பகிர் குற்றச்சாட்டை வெளியிட்ட வரலட்சுமி!

தமிழ் திரைப்பட நடிகையும் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் தனக்கு நடைபெற்ற இன்னல்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 
 

போடா போடி திரைப்படத்திற்கு பிறகு 4 வருடங்கள் படவாய்ப்புகள் இன்றி தவித்தாகவும் இதற்கு காரணம் வாய்ப்பு தருவதாக சொன்ன அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களும் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என பகிர் குற்றத்தை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு தான் பாலா சார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த இயக்குனர்கள் கெட்டவர்கள் தான் என நினைத்த போது இல்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை பாலா சார் பார்த்த பின் தான் உணர்ந்தேன்.

 பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழந்து விட வேண்டியது தான் என கூறியதுடன் படுக்கைக்கு அழைத்தவர்கள் பற்றிய விபரம் ஆதாரத்துடன் உள்ளது என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News