×

வில்லி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை.. அப்போ அந்த சீனெல்லாம் இருக்குமோ!

தமிழில் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து காஜல், பல முன்னணி  ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
 
kajal agarwal

தமிழில் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து காஜல், பல முன்னணி  ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'மகதீரா' படத்தில் நடித்து முன்னணி நடிகையானார்.

இப்படத்தையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து குவிந்தது. இதையடுத்து தமிழில் இவர் கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் காஜல் நடிக்க தொடங்கினார்.

kajal agarwal
kajal agarwal

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தனது நண்பரான, கௌதம் கிட்சலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்தார். மேலும் காஜல் திருமணத்திற்கு பிறகும் தனது கேரியரை நிறுத்த போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

திருமணத்திற்குப் பின் அதிக கவர்ச்சி காட்டிவரும் இவர், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று தனது பிகினி போட்டோவை வெளியிட்டு அனைவரையும் சூடேற்றியிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கில் பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நாகார்ஜுனா உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். 

இதில் நாகார்ஜுனாவுடன் இணைந்து ரா ஏஜெண்டாக நடிக்கும் இவர், கதைப்படி ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராக மாறிவிடும் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம். வில்லி என்றால் நாகர்ஜூனாவுடன் பறந்து பறந்து சண்டைபோடும் காட்சிகளெல்லாம் இருக்குமா என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

kajal agarwal
kajal agarwal

தற்போது காஜல் தமிழில் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உட்பட 6 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் உமா என்ற ஒரு படம், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News