Categories: latest news television

இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்குறாரு! ‘பிக்பாஸில்’ கமல் பண்ண வேலைக்கு பதிலடி கொடுத்த நிர்வாகம்

BiggBoss Season7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் தொடர் அமைந்து வருகிறது. ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்து இப்போது 7வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலமே நடிகர் கமல்ஹாசன்.

அவர் தொகுத்து வழங்கும் விதம், போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் கொடுக்கும் முறை என பார்க்கும் ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அடுத்தவாரம் கமல் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஒரு ஆவலை ஒவ்வொரு வாரமும் ஏற்படுத்துவதாலேயே தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் கெட்டினு நினைச்சா பக்கா மோசடியா இருக்காரே!.. புலம்பி தள்ளும் சீரியல் நடிகை மகாலட்சுமி!

என்றும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரு புதுமையை கொண்டுவரும் முயற்சியில் பிக்பாஸ் குழு இறங்கியுள்ளது. இதுவரை ஒரு வீடாக இருந்த பிக்பாஸ் வீடு இந்த சீசனில் இரண்டு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கனீர் குரலில் பேசும் பிக்பாஸ் இரண்டு வீடு என்பதால் இன்னொரு வீட்டில் ஒரு பெண் குரல் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கும் சம்பளம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..

இந்த சீசனுக்காக கமலுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 130 கோடியாம். ஆரம்பத்தில் வெறும் 6 கோடி வாங்கிக் கொண்டிருந்த கமல் இந்த சீசனில் 130 கோடியை சம்பளமாக பெறுகிறாராம். அதற்கு பின்னனியில் எதாவது ஒரு காரணம் இருக்கும் என்று விசாரித்ததில் பெரும் சூட்சமுமே நடந்திருக்கிறது.

பிக்பாஸுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இதில் தன்னையும் ஒரு பார்ட்னராக இணைத்துக் கொள்ள விரும்பினாராம் கமல். அப்படி பார்ட்னராகிவிட்டால் இதையும் விட பெரும் தொகை அவருக்கு கொடுக்க வேண்டி வரும். இதை கருத்தில் கொண்டே நிர்வாகம் ஒரு பெரும் தொகையை கொடுத்து கமலை ஆஃப் செய்திருக்கிறதாம்.

இதையும் படிங்க: ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..

Published by
Rohini