×

கார்த்தி செய்த சிறப்பான சம்பவம்.. வைரலாகும் புகைப்படங்கள்...குவியும் பாராட்டுக்கள்...

 

நடிகர் கார்த்தி உழவன் ஃபவுண்டேசன் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில், கருவேல மரங்கள் சூழ்ந்திருந்த சூறாவளி ஓடையை சீரமைத்து தற்போது அதில் நீர் செல்லும் படி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை உழவன் ஃபவுண்டேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆனால் இது தமிழகத்தின் எந்த இடத்தில் நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை.

அதில், கருவேலமரங்கள் இருந்த போது, சீரமைத்த பிறகு, தற்போது என 3  புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி ‘இயற்கை எப்போதும் நமக்கு அதிகமாக திருப்பி தருகிறது’ என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, கார்த்திக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News