×

சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுடன் ஒப்பிட்ட ரசிகர்... குஷ்பு கொடுத்த செமத்தியான பதிலடி 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்திருந்த ஷில்பா கேரக்டருடன் தன்னை ஒப்பிட்ட ரசிகருக்கு குஷ்பு சிறப்பான பதிலடி கொடுத்திருக்கிறார். 

 
சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுடன் ஒப்பிட்ட ரசிகர்... குஷ்பு கொடுத்த செமத்தியான பதிலடி

1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை குஷ்பு முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் காங்கிரஸில் இணைந்த அவர், சமீபத்தில் பிஜேபியில் சேர்ந்தார். அவர் பிஜேபி சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளராகக் களம்காண்கிறார். சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, யாராவது வம்பிழுத்தால் செமத்தியாகப் பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 


அப்படித்தான் குஷ்பு பகிர்ந்திருந்த ஒரு போட்டோவுக்குக் கீழ் அவரையும் சூப்பர் டீலக்ஸ் திருநங்கை கதாபாத்திரமான ஷில்பாவையும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் கமெண்டடித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த குஷ்பு, `சிறப்பு. அந்த கேரக்டர் விஜய் சேதுபதிக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. உங்கள் மனநிலை என்னவென்று எனக்குத் தெரிகிறது. திருநங்கைகளைக் கேலி செய்வதைத் தயவுசெய்து நிறுத்துங்கள். அவர்களும் நமக்கு சமமானவர்களே’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News