×

நடிகர் விஷால் நடித்த 'நச்..." படங்கள் 

 
vishal

விஷால் தமிழ்சினிமாவின் முன்னணி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர். இவரது முழு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி. அர்ஜூனுடன் வேதம், ஏழுமலை ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த்திரைப்படங்களின் மூலம் தான் பிரபலமானார். இவர் நடித்த முதல் படம் செல்லமே. சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, அவன், இவன், வெடி, தீராத விளையாட்டுப்பிள்ளை, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, மதகஜராஜா, மருது, கதகளி, கத்திசண்டை, சண்டக்கோழி 2, இரும்புத்திரை, துப்பறிவாளன்  படங்கள் இவரது நடிப்பில் ஹிட்டானது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயாலாளராக உள்ளார். இவர் நடிப்பில் அதிரடி ஹிட்டான 5 படங்களைப் பார்க்கலாம். 

சண்டக்கோழி

sako

சண்டக்கோழி 2005ல் வெளியானது. படம் 200நாள்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றது. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், சுமன் செட்டி, கருப்பசாமி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் மசாலாப்படமாக இருந்தாலும் பாட்டு, பைட் சூப்பர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். என்னமோ நடக்கிறது..., கும்தலக்கடி கானா, கேட்டால் கொடுக்கற, தாவணி போட்ட பாடல்கள் செம மாஸ்... சண்டக்கோழி 2 படமும் வெளியாகி பிரபலமானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

தாமிரபரணி 

thb

ஹரி இயக்கத்தில் 2007ல் வெளியான படம் தாமிரபரணி. இப்படத்தில் விஷால், பானு, பிரபு, நதியா, நாசர், விஜயகுமார், நிழல்கள் ரவி, மனோரமா உள்பட பலர் நடித்தள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. கிராமிய பின்னணியில் உருவான ஒரு கோபக்கார இளைஞனின் கதை. காதலுக்காக அவன் குடும்ப உறவை எப்படி கையாள்கிறான் எனவும் அவனது கோபத்தால் காதல் வெற்றி பெற்றதா என்பதையும் வெண்திரையில் காணலாம். 
கட்டபொம்மா ஊரெனக்கு.., தாலியே தேவையில்ல.., கருப்பான கையாலே, வார்த்த ஒண்ணு, திருச்செந்தூரு முருகா ஆகிய பாடல்கள் ரசிக்க வைத்தன. அதிலும் கருப்பான கையாலே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.  

சிவப்பதிகாரம் 

விஷால் நடித்த அதிரடி படங்களில் ஒன்று சிவப்பதிகாரம். இது முற்றிலும் மாறுபட்ட படம். 2006ல் வெளியான இப்படத்தை கரு.பழனியப்பன் இயக்கினார். விஷால், மம்தா மோகன்தாஸ், கஞ்சா கருப்பு, ரகுவரன், மணிவண்ணன், உபேந்திரா, ராஜன் பி.தேவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு ஆஜ் கா நயா கமினா என்ற பெயருடன் வெளியானது. வித்யாசாகர் இசையில் அற்றை திங்கள், சித்திரையில் என்னை, அடி சந்திர சூரிய, கல்லூரி சாலைக்குள், மாரி மகமாயி, மன்னார்குடி கலகலக்க உள்பட பல பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

நான் சிகப்பு மனிதன் 

ns

2014ல் விஷால் தயாரிப்பில் வெளியான இப்படத்தை திரு இயக்கினார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான படம் இது. விஷாலுடன் லட்சுமி மேனன், இனியா, சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், சுந்தர் ராமு, ஜெகன், பிரமிட் நடராஜன் உள்பட பலர் நடித்தனர். ஏலேலோ, பெண்ணே ஓ பெண்ணே, இதயம் உன்னை தேடுதே, ஆடு மச்சி பாடல்கள் சூப்பர். நகரத்துப்பின்னணியில் உருவான ஒரு த்ரில்லரான படம் இது. அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டன. 

இரும்புத்திரை 

it

2018ல் மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை விஷால் தயாரித்தார். விஷாலுடன், சமந்தா, அர்ஜூன், டெல்லிகணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவானது இப்படம. ஜாரஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் வெளியான இப்படம் பட்டையைக் கிளப்பியது. நவீன தொழில்நுட்பங்களைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. தெலுங்கில் அபிமன்யடு என்ற பெயரில் வெளியானது. ராணுவ மேஜராக நடித்துள்ள விஷாலுக்கு வில்லனாக அர்ஜூன் படத்தில் நடித்து இருப்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News