×

பிரபுதேவா 2வது திருமணம் செய்தது உண்மைதான் - ஒப்புக்கொண்ட ராஜூ சுந்தரம்

 

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர்  என பல்வேறு முகங்களை கொண்டவர் பிரபுதேவா. அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில் வில்லு படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. எனவே, அவரை திருமணம் செய்வதற்காக முதல் மனைவி ரமலாத்தை அவர் விவாகரத்து செய்தார். ஆனால், நயனுடன் அவருக்கு திருமணம் நடைபெறும் முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிக்க துவங்கிவிட்டார். பிரபுதேவாவும், திரைப்படங்களை இயக்குவது மற்றும் நடிப்பது என பிரபுதேவா கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு பிசியோதெரபி மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது. தற்போது அந்த செய்தி உண்மையாகியுள்ளது. பிரபுதேவாவுக்கு முதுகுவலி மற்றும் கால்வலி இருந்துள்ளது. எனவே, மும்பையில் ஹிமானி என்கிற பிசியோ தெரபி மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அவரின் சகோதரர் ராஜூசுந்தரம் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தால் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News