×

என் ஆசை இதுதான்... பிக்பாஸூக்குப் பிறகு முதல்முறையாக மனம்திறந்த ரம்யா பாண்டியன்

சினிமாவில் புகழ் பெறணும் என்பதுதான் தனது விருப்பம் என முதல்முறையாக மனம்திறந்திருக்கிறார் `மொட்டை மாடி’ புகழ் ரம்யா பாண்டியன்.
 

மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் மூலம் புகழ்பெற்றவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் விஜய் டிவியில் சில ஷோக்களில் கலந்துகொண்டவர், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றார். பிக்பாஸ் சீசன் - 4-ன் ஃபைனலிஸ்ட்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியே வந்த ரம்யா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒருபடம் உள்பட 2 படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். முன்னணி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் ரம்யா பாண்டியன், ``நான் இதுவரை அதிகமான படங்களில் நடிச்சதில்லை. ஆனாலும், குறுகிய காலத்திலேயே மக்களின் ஆதரவு எனக்கு அதிகளவு கிடைச்சிருக்கு. அதனால, நான் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல. நான் ரொம்பவே ஹேப்பியா இருக்கேன். `பிக்பாஸ்’ நிகழ்ச்சியால எனக்குக் கூடுதலான புகழும் மக்களின் அன்பும் கிடைத்திருக்கிறது. சினிமா வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்த்தேன். அது சரியாகவே நடந்திருக்கு. சூர்யா சார் பேனர் உட்பட இரண்டு புதுப் படங்கள்ல கமிட்டாகியிருக்கேன். விரைவில் ஷூட்டிங் போகணும்னு ஆசைப்படுறேன். சினிமாவுல புகழ்பெறணும்ங்கிறதுதான் என்னோட விருப்பம். அது சரியா நடக்கும்னு உறுதியா நம்புறேன்’’ என்று நெகிழ்ந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். 

From around the web

Trending Videos

Tamilnadu News