×

பாடகி சுசீலா வாழ்க்கை வரலாறு படமாகிறது? - ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்

 
suseela

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 99 சாங்ஸ் திரைப்படம் மூலம் கதாசிரியராக மாறினார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கில் மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் பாடகி சுசீலா பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அவரை சந்தித்த போது ‘99 சாங்ஸ்’ படம் பார்த்தீர்களா என கேட்டேன். அப்படி என்றால் என்ன எனக்கேட்டார். நான் கதை எழுதியுள்ளேன். நெட்பிளிக்ஸில் இருக்கிறது பாருங்கள் என்றேன்.

99 songs

படத்தை பார்த்துவிட்டு எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். படம் நன்றாக இருக்கிறது. என்னுடையை வாழ்க்கையையும் இதுபோல் திரைப்படமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாக பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவர் என்னை பாராட்டியது பெருமையான விஷயம்’ என ரகுமான் கூறினார்.

எனவே, பாடகி சுசீலாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க ஏ.ஆர். ரகுமான் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News