×

அன்றே கணித்தார் சிவகார்த்திகேயன்... இப்போ பேச சொல்லுங்க பாக்கலாம் கடுப்பில் நெட்டிசன்கள் 

பெட்ரோல் விலை குறித்து நடிகர் சிவகார்த்திகேயனின் பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக தனது திறமையால் கோலிவுட்டில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார். விரைவில் இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் திரைக்கு வர இருக்கிறது. அயலான், டான் உள்ளிட்ட படங்களிலும் சிவா பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி பட்டம் கொடுத்து தமிழக அரசு சிறப்பு செய்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பழைய பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், பெட்ரோல் விலை குறித்து கிண்டலாக அவர் ஸ்டைலில் எழுதி இருந்தார். தற்போதைய சூழலுக்கு அந்த பதிவு செட்டாகும் என்பதால் ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர். ஆனால் அந்த பதிவை சிவகார்த்திகேயன் நீக்கி விட்டார்.

இதனால், சில நெட்டிசன்கள் அப்போ சொன்னாரு இப்போ சொல்ல சொல்லுங்க பார்ப்போம் என அவரையும் வம்புக்கு இழுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News