×

தற்கொலை செய்துகொண்ட இளம்நடிகை – சென்னையில் பரபரப்பு 

சென்னையில் வசித்து வந்த துணைநடிகை பத்மஜா என்பவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொனடது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் வசித்து வந்த துணைநடிகை பத்மஜா என்பவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொனடது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மஜா. 23 வயதாகும் இவர் இப்போது சிறு சிறு வேடங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முழுவதும் இவரது வீட்டுக்கதவு திறக்கப்படாத நிலையில் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்கதவை உடைத்துப் பார்த்துள்ளனர்.

பத்மஜா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீஸாருக்குத் தகவல் சொன்னதை அடுத்து அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவரது செல்போனில் இருந்த வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.

பத்மஜாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அவரது கணவருடன் ஏற்ப்ட்ட பிரச்சனைக் காரணமாக குழந்தையுடன் கணவர் பிரிந்து சென்றுள்ளார். இதனால் உறவுக்கார வாலிபருடன் தங்கி இருந்த அவரை வீட்டின் உரிமையாளர் திட்டி வீட்டைக் காலி செய்ய சொன்னதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News