×

குடிகார கணவரின் மரணம்… மனைவி மீது சந்தேகம் – விலகாத மர்மம்!

திருமணம் ஆன 10 மாத காலமாக குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்திய கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணம் ஆன 10 மாத காலமாக குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்திய கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ரவீந்திரன். அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரியா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய அவர்களது குடும்ப வாழ்க்கை ரவீந்தரனின் குடிப் பழக்கத்தால் துன்பமயமானது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரியாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார் ரவீந்தரன்.

இதுபோல சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் வெளியே வந்த பிரியா கணவர் மயக்கமடைந்து விட்டதாக சொல்லியுள்ளார். அதைக் கேட்டு உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உள்ளே ரவீந்தர இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து உட்ற்கூறாய்விற்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரவீந்தரனின் மரணத்துக்கு அவர் மனைவியும் காரணமாக இருக்கலாமோ என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News