×

ஆற்றில் சிக்கியவரை காப்பாற்றிய குரங்கு - வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்

ஆற்று சகதியில் சிக்கியவை ஒரு உரங்குட்டான் குரங்கு கை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் ஏராளமான மனித குரங்குகள் வசித்து வருகின்றன. அழியும் அந்த இனத்தை காப்பாற்ற சமூக ஆர்வலர்கள் பலரும் முயன்று வருகின்றனர். இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்கள் அதிகம் வாழும் இடத்தில் உலவும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இடுப்பளவு சகதியில் சிக்கிக் கொண்டார். அப்போது அங்கு வந்த ஒரு குரங்கு அவருக்கு உதவும் வகையில் கையை நீட்டியது. அவரும் அதை பிடித்து மேலே வந்துவிட்டார்.

இந்த காட்சியை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் தற்போது இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News