×

சுஷாந்தின் ஆவியுடன் பேசிய நபர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியதாக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்
 

சுஷாந்தின் ஆவியுடன் பேசிய நபர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பாலிவுட்டின் இளம் வளர்ந்து வரும் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் ஆதிக்கமே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சுஷாந்தின் ரசிகர்கள் சிலர் Steve Huff என்ற  ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நபரிடம்  சுஷாந்தின் ஆவியுடன் பேச வேண்டும் என சொல்ல,  அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘நீங்கள் எப்படி இறந்தீர்கள் என கேட்க ஒரு குரல் " நான் கடவுளிடம் இருக்கிறேன். சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறேன். சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது, அவர்கள் நரகங்களைக் கொண்டு வந்தார்கள், அது இப்போது முடிந்தது.மேலும், நட்பு என்ற பெயரால் என்னை கொலை செய்து விட்டார்கள்.எனக் கூற மற்றொரு பெண் குரல் ‘இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்’ எனக் கூறுகிறது.

இந்த வீடியொவானது தற்போது இணையதளத்தில் வைரலாகப் பரவி 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News