">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வேறு வழியில்லை!… ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்?.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…
வேறு வழியில்லை!… ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்?.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது.
இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
ஒருபக்கம், மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் அடிபட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்து திரையரங்குகள் எப்போதும் திறக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வருவதால் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது விஜயை திரையில் பார்த்து ரசிக்க விரும்பும் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.