×

இந்த அரசாங்கமே வேஸ்ட்... விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.. மீரா மிதுன் அடாவடி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மற்றவர்கள் பற்றி தவறான புகாரை கூறி ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கியவர் மீரா மிதுன். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியாக உடையில் நடனமாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதற்காக ரசிகர்கள் அவரை எப்படி திட்டினாலும், மோசமாக விமர்சித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.
 

தற்போது அவர் தமிழக அரசையும் விமர்சிக்க துவங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் சரியில்லை எனவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் டிவிட் செய்ய துவங்கியுள்ளார்.

அதன்படி ஒரு மேலே போய். இந்த அரசாங்கமே வேஸ்ட். நான் உண்மையை கூறுவதால் விஜயபாஸ்கர் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். தைரியம் இருந்தால் என்னிடம் நேரடியாக பேசுங்கள். இவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். என்னால் இதை விளக்க முடியும் என பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News