×

பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் –டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு மக்கள் மனு !

விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாததால் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தை மாற்ற சொல்லி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

 

விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாததால் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தை மாற்ற சொல்லி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா மைலம்பாடி கிராமத்தில் சமீபத்தில் விவசாய விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையைத் திறந்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால் தாசில்தார் துணையுடன் சம்மந்த பட்ட இடம்  தரிசு நிலம் எனக் காட்டி டாஸ்மாக்(கடை எண் 3571­) கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மக்கள் பாதை என்ற அமைப்பைச் சேர்ந்த தமிழரசி அம்மாவட்ட ஆட்சியரிடம் ’ திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு அருகே வெறும் 300 மீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளியும்  கூட்டுறவு பால் சொஸைட்டியும் இருக்கின்றன. இதனால் இங்கு குடித்துவிட்டு திரிபவர்களால் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விவசாய நிலத்தை தரிசு நிலம் எனப் பெயர் மாற்றி இந்த கடையைத் திறந்துள்ளனர். அதனால் மாணவர்களைக் குறிப்பாக பெண் குழந்தை மாணவர்களையாவது அவர்களிடம் இருந்து காப்பாற்றும் விதமாக டாஸ்மாக் கடை அங்கிருந்தாலும் பரவாயில்லை. பள்ளிக்கூடத்தையாவது வேறு இடத்துக்கு மாற்றுங்கள்’ என மனு அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News